மடியிலே கனமில்லாத 'மச்சான்ஸ்' அது. நமீதா நேரடியாக கைகுலுக்கினால் கூட சிலிர்க்காது. ஆனால் இவர் மச்சான்ஸ் என்று சொல்லும் மனசு குலுங்கி போகிறது ஒவ்வொரு முறையும். ஆனால் இந்த மச்சான்ஸ்-ல் ஒரு லு வை சேர்த்து 'மச்சான்ஸ்லு' என்று ஆந்திராவுக்கும் ஏற்றுமதி செய்வார் போலிருக்கிறது நமீதா. ஏனென்றால் சமீபத்தில் அவருக்கு கிடைத்திருக்கிற ஹிட்டும், அதை தொடர்ந்த அழைப்பும்தான் காரணம்! தமிழில் அநேகமாக தலைமுழுகப்பட்ட நமீதாவுக்கு ஆந்திர தேசம் கைகொடுத்திருக்கிறது. இவர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்த சிம்ஹா என்ற படம் செமத்தியான ஹிட். அதுவும் ஆந்திராவில் தனி தெலுங்கானா கலவரத்திற்கு பிறகு ஹிட் ஆகிற முதல் படம் என்பதால் இந்த ஹிட்டுக்கு பெரிய மரியாதை கிடைத்திருக்கிறதாம். போதும் தமிழ்நாட்டுக்கு உழைச்சது. நம்ம பக்கம் வாங்க என்று இருகை நீட்டி அழைக்கிறதாம் ஆந்திரா. இதையடுத்து ஏராளமான படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருக்கிறாராம் நமீதா. தமிழில் சொந்தப்படம் எடுக்க நினைத்து கதை கேட்டு வைத்திருந்தார் சில உதவி இயக்குனர்களிடம். சிம்ஹாவின் இந்த திடீர் வெற்றி, இதுபோன்ற உ.இ க்களின் நம்பிக்கையில் பாம் போட்டிருப்பதுதான் பரிதாபம்! அவருக்கென்ன? 'மன்னிச்சுகோங்க மச்சான்ஸ்' என்று கூறிவிட்டால் போச்சு! |
GIF animations generator gifup.com
1 comments:
:-((
சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.