Pages

Saturday, May 1, 2010

யோகாவில் மூழ்கிய த்ரிஷா!


நெஞ்சில் டாட்டூ வரைவது, பற்களில் ஜிகினா ஒட்டிக் கொள்ளுதல், கண் இமைகளில் புதிய வண்ணம் பூசிக்கொள்ளுதல் என மேல் அழகை மெயின்டெய்ன் செய்வதில் அதிக அக்கறை காட்டி வந்த நடிகை த்ரிஷா, இப்போதுதான் உள் அழகை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளாராம்.

அதற்கு அவர் நாடியிருப்பது யோகாவை.

யோகா ஒன்று போதும், உடம்பையும் மனசையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது என யோகக் கலையின் பிராண்ட் அம்பாஸடர் ரேஞ்சுக்கு பார்ப்பவர்களிடமெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஐதராபாத் சென்றுவிட்ட த்ரிஷாவுக்கு ரெஸ்ட் எடுக்கக் கூட நேரமில்லையாம்.

ஆனால், சென்னை திரும்பியதும் யோகா பயிற்சிகளை முடித்த பிறகு அந்தக் களைப்பே தெரியவில்லையாம் அவருக்கு.

இப்போது தமிழில் கமல்ஹாஸன் ஜோடியாக யாவரும் கேளிர் (காருண்யம்?) படத்தில் நடிக்கும் த்ரிஷா, கமலுக்கு மொத்தமாக 4 மாதங்கள் கால்ஷீட் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்காக, பல வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.

இந்தப் படத்தில் சற்று கூடுதல் கவர்ச்சி காட்ட வேண்டிய பாத்திரம் என்பதால், சற்று உடல் சதைப்போட்ட மாதிரி தெரிய வேண்டும் என கமல் கேட்க, உடனே அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார் த்ரிஷா. GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.