Pages

Saturday, April 24, 2010

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நடிகை தமன்னா

“கேடி” படம் மூலம் 2006-ல் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. பின்னர் “வியாபாரி” படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். இருபடங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை. பிறகு “கல்லூரி” படத்தில் நடித்தார். தனுசுடன் “படிக்காதவன்” படத்தில் ஜோடியான பிறகு அதிர்ஷ்ட காற்று வீசியது. “அயன்” படம் மூலம் சூர்யா ஜோடியானார். கார்த்தியுடன் நடித்த “பையா” படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
 
தற்போது தமன்னா மார்க்கெட் எகிறியுள்ளது. “சுறா” படத்தில் விஜய் ஜோடியாகி உள்ளார். “தில்லாலங்கடி” படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வருகிறார்.
 
மார்க்கெட் இல்லாதபோது ரூ.25 லட்சம் முதல் சம்பளம் வாங்கினார். முன்னணி நடிகர்கள் ஜோடியானதும் ரூ.75 லட்சமாக்கினார். இப்போது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளார். சம்பளம் முழுவதையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். தியாகராய நகர், வடபழனி பகுதிகளில் தரகர்கள் மூலம் ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் தொடர்பு கொண்டு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை பேசி வருகிறார். காலி நிலங்களையும் விலைக்கு வாங்குகிறார். GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.