சமந்தாவும் இல்லையாம்... அவன் இவன் படத்திற்காக இன்னொரு ஹீரோயின் தேடி பெரும் வேட்டை நடத்தி வருகிற பாலா, கடைசியாக தேர்வு செய்திருந்த இந்த பெண்ணையும் போயிட்டு வாம்மா... என்று கூறிவிட்டாராம். தனது ஒவ்வொரு படத்திற்கும் இவர் கதாநாயகி தேடுவதையே தனி எபிசோடாக எடுத்து ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பி காசு பார்க்கலாம். அப்படியொரு சுவாரஸ்யமான சிந்துபாத் கதை அது. முந்தைய படமான நான் கடவுளுக்கும் சரி, இப்போது எடுத்துவரும் அவன் இவனுக்கும் சரி. ஒரே ஃபார்முலாதான் கதாநாயகி தேடுகிற விஷயத்தில். லேட்டஸ்டாக பாலாவிடம் இன்டர்வியூக்கு போன நடிகை மது ஷாலினி இவர் 16 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தனது கதைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறாராம் பாலா. ஆச்சர்யம் என்னவென்றால் பாலாவின் நீண்ட தேடலில் பூஜாவும் இடையே வந்து போனார் என்பதுதான். நான் கடவுள் படத்தில் பட்ட கஷ்டம் இன்னும் மறந்திருக்காது அல்லவா? இந்த அழைப்பை அன்போடு மறுத்தாராம் பூஜாவும்! |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.