இருக்கறத விட்டுட்டு பறக்க நினைக்காதே என்பது பழமொழி. பறக்கற வேலையை விட்டுட்டு கோடம்பாக்கத்துல ஒரு ஹீரோவா இருக்கிற வேலையை செய்ய வந்திருக்கிறார் ஈஸ்வர். விருந்தாளி படத்தின் ஹீரோ! எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் முக்கிய பணியிலிருந்த இந்த இளைஞர் இந்த விமானத்தில் பயணம் செய்த தயாரிப்பாளர் கண்ணில் பட, 70 எம்எம் ஸ்கிரீனில் டூயட் பாடுகிற வாய்ப்பை வழங்கிவிட்டார் அவர். எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆசை நிறைய இருந்திச்சு. அதுக்கேற்ற மாதிரி அவரு கேட்டதும் உடனே வேலையை விட்டுட்டே வந்திட்டேன் என்று சிரிக்கிறார் ஈஸ்வர். ஆள் பார்ப்பதற்கு ஆக்ஷன் ஹீரோ மாதிரி இருந்தாலும், முதல் படத்திலேயே காமெடியாக நடித்திருக்கிறாராம். நானும் சிங்கமுத்துவும் அடிக்கிற காமெடி செம லு£ட்டியா இருக்கும் என்றார். இவருக்கு ஜோடி தியானா. மலையாளத்திலிருந்து வந்திருக்கும் மற்றுமொரு மல்கோவா. அவள் பெயர் தமிழரசி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் விருந்தாளியில் ஃபுல் ஹீரோயின்! கொட்டி கிடக்குற அழகை, வெட்டி எடுக்கிற ஆசை யாருக்குதான் இருக்காது. கிளாமரா நடிப்பீங்களா என்று ஒரு கேள்வியை கேட்டு, ஆர்வத்தோடு காதை தீட்டினால், ம்ஹ¨க்க்கும் என்று பதில் வருகிறது கோபமாக. நிச்சயமா கிளாமரா நடிக்க மாட்டேன் என்றார். இப்படிதான் நடிக்க வந்த புதுசில் நயன்தாராவும் சொன்னார் என்று மேலும் திரி கொளுத்தினால், அது நயன்தாரா. இது தியானா என்றார் பட்டிமன்ற ஸ்டைலில். படத்தின் டைரக்டர் வாட்டர்மேன், லோகிததாசிடம் இணை இயக்குனராக இருந்தவர். அதென்ன வாட்டர்மேன்? பேனாவை கண்டு பிடிச்ச விஞ்ஞானியின் பெயராம்! மத்தவங்கள்ளாம் மையை ஊற்றி எழுதினால், இவர் மனசையே ஊற்றி எழுதியிருப்பாரு போலிருக்கு! |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.