Pages

Thursday, April 8, 2010

விஷால் முகத்தில் 'பல்ப்' வெளிச்சம்!....


பாலா-விஷால் விரிசல் தீர்ந்தது -உற்சாகத்தில் அவன் இவன் ஆக்ஷன் ஹீரோ என்றாலும், அவரையும் ஆட்டிப்பார்க்கும் சில சம்பவங்கள்! அப்படிதான் படப்பிடிப்பு பாதியி அனுப்பப்பட்டார் விஷால். அவன் இவன் படத்தின் முதல் ஷெட்யூல் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. பேக்கப் சொல்லி வீட்டுக்கு கிளம்பி வந்தார் பாலா. ஏன்? எதற்கு? என்று புரியாமலே, தவித்த விஷால் அதன்பின் பாலாவை சந்திக்க முயன்றதாகவும், அவர் தவிர்த்ததாகவும் டமாரம் கொட்டியது கோடம்பாக்கம். இப்படியெல்லாம் யாரு கிளப்பிவிடுறாங்க என்றே தெரியல. எல்லாம் நல்லாதான் போயிட்டு இருக்கு என்று தயாரிப்பு தரப்பிலிருந்து விளக்கங்கள் வந்தாலும், முதல் ஷெட்யூலை ஏன் அதுக்குள்ளே முடிச்சாராம் பாலா? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள் பத்திரிகையாளர்கள். அதெல்லாம் அப்போ. இப்போ நிலைமையே தலைகீழ்... பாலாவும், விஷாலும் சந்தித்துக் கொண்டார்களாம். தன் மீது இருந்த தவறுகளை உணர்ந்த விஷால் பாலாவை கன்வின்ஸ் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து இம்மாதம் மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்புகிற மூடுக்கு வந்திருக்கிறாராம் பாலா. பத்தாம் தேதிக்கு பிறகு கிளம்புகிறது அவன் இவன் டீம். முன்பு படப்பிடிப்பு நடந்த அதே தென்காசிக்கு யூனிட்டை கிளப்ப முடிவு செய்திருக்கிறாராம் பாலா. மொத்தத்தில் விஷால் முகத்தில் 'பல்ப்' வெளிச்சம்! GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.