இதுவரை 74 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் முதல்வர் 75வதாக இளைஞன் படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்குகிறார். பா.விஜய் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், மீனாட்சி நடிக்கின்றனர். மேலும், வடிவேலு, சுமன், நாசர், குஷ்பு, மணிவண்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். பி.சி ஸ்ரீராமின் உதவியாளர் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். இணை தயாரிப்பு பெஞ்சமின்.
டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் 50வது படமான இளைஞன் படப்பிடிப்பை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். உற்சாகத்துடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த முதல்வர் கருணாநிதி மைக்கில் ஆக் ஷன் என்று சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். பா.விஜய், மணிவண்ணன், நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர்கள் முதல் காட்சியில் நடித்தனர்.
நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன், தயாரிப்பாளர் ராம.நாராயணன், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சூட்டிங்கை தொடங்கி வைத்த பின்னர் நடிகர் நடிகைககள் முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து நின்றபடி உற்சாகமாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.