ரீமேக் உரிமைக்காக கோடம்பாக்கத்தில் வெட்டு குத்துகளும் ஆசிட் வீச்சுகளும்தான் நடக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தைய அத்தனை ஸ்டண்ட் மீறல்களும் அங்கே நடந்து வந்திருக்கிறது. ஒரு படத்தை இயக்குகிற டைரக்டர் கதை என்று தனது பெயரை போட்டுக் கொள்ள தவியாக தவிப்பார். காரணம் அந்த படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படும் போது, விற்றதில் 40 சதவீத பணம் அவருக்கு போய் சேர வேண்டும் என்பது டிரேட் விதி! பாடிகாட் என்ற மலையாள படத்தின் ரிமேக் உரிமை அப்படத்தின் தயாரிப்பாளர் ஜானி சகாரியா வசம் இருந்ததாகவும், ரிலீஸ் நேரத்தில் அந்த உரிமையை கோகுலம் நிறுவனத்திற்கு அவர் எழுதி கொடுத்துவிட்டதாகவும் புலம்பல்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இப்படத்தை இயக்கிய சித்திக், அதே படத்தை காவல்காரன் என்ற பெயரில் விஜய்யை வைத்து தமிழில் எடுத்து வருகிறார். ரீமேக் உரிமையே அவரிடம் இல்லை. பிறகெப்படி இப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சித்திக்கின் பதில்? அந்த உரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் ஜானி சொல்வதிலும் உண்மையில்லை என்கிறார். பொதுவா நிக்கும்போதும் பிரச்சனை. பிலிமா விக்கும்போதும் பிரச்சனை. நல்லாயிருக்கு விஜய் ஜாதகம்! |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.