Pages

Sunday, April 25, 2010

ராவணன் புதிய தகவல்கள்

 
 
இந்தியில் ராவண். தமிழில்...? ராவண், ராவணா, ராவணன், அசோக வனம்... இப்படி அரை டஜன் பெயர்கள் சொன்னார்கள். இறுதியில் ராவணன் என்ற பெயரை டிக் செய்திருக்கிறார் மணிரத்னம்.

இந்தியில் ட்ரெய்லர் வெளியிட்டுவிட்டார்கள். இன்று டி சீ‌‌ரிஸ் படத்தின் ஆடியோவை வெளியிடுகிறது. தமிழில் இதெல்லாம் எப்போது என்று ரசிகர்கள் முணுமுணுக்க‌த் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தி ஆடியோ ரைட்ஸை டி சீ‌‌ரிஸ் வாங்கியிருப்பதைப் போல தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் ஆடியோ வெளியிடப்படும் என்கிறார்களே தவிர உறுதியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தெலுங்கில் ராவணன் படத்துக்கு மணிரத்னம் வைத்திருக்கும் பெயர் வில்லன்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் ஈகோ மணிரத்னத்துக்கு ச‌ரிவராததால் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு சந்தோஷ்சிவனே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது எடிட்டிங் பணிகள் நடந்து வருகின்றன. நான்கு படங்களுக்கு‌‌ரிய ஃபுட்டே‌ஜ் இருப்பதால் பணிகள் மெதுவாகவே நடக்கின்றன. ஜூன் 18 ராவணன், ராவண், வில்லன் மூன்றும் திரைக்கு வருகிறது. GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.