WD
முதல் படம், அதுவும் அம்மா இயக்கத்தில். எப்படி இருக்கிறது?
‘ஷூட்டிங் ஸ்பாட்ல நான் அம்மாங்கிறதையே மறந்திடு. நான் டைரக்டர், நீ ஹீரோ. பெர்ஃபாமன்ஸ்தான் முக்கியம். எத்தனை டேக் ஆனாலும் பரவாயில்லை’ன்னு ஒவ்வொரு நாளும் தைரியம் சொல்லிதான் ஷாட்டுக்கே போவாங்க. அம்மாவால கேமரா பயமில்லாமல் நடிச்சேன்.
காதல் காட்சிகளிலுமா?
ஓ.. இல்லை. அம்மா எவ்வளவுதான் தைரியம் தந்தாலும் பாத்ரூமில் ஹீரோயினை கட்டிப் பிடிக்கிற சீனில் நடிக்க ரொம்பவே கூச்சப்பட்டேன். மத்தபடி எந்தப் பிரச்சனையும் இல்லை.
உங்களுக்கு ரோல் மாடல் யாராவது இருக்கிறார்களா?
ஹீரோயிஸம் இல்லாத கேரக்டர்னா சிவாஜி சார் மாதிரியும், ஆக்ரோஷமா நடிக்கிறதில் விஜய் சாரும் என்னோட சாய்ஸ். ஆனால் நம்ம மெச்சூரிட்டிக்கு மீறி பன்ச் டயலாக் பேசினால் எடுபடாது.
ஆனா, முதல் படத்திலேயே நீங்க பன்ச் டயலாக் பேசியிருக்கிறீங்களே?
படத்தில் கல்லூரியில் படிக்கிற சாதாரண இளைஞனா இருக்கிறப்போ நான் பன்ச் டயலாக் பேச மாட்டேன். அப்புறம் சினிமாவில் பெரிய ஹீரோவான பிறகுதான் பன்ச் டயலாக் எல்லாம் வரும்.
சாம்பிளுக்கு ஒன்றிரண்டு...?
சுண்டிவிட்டா சுனாமி டோய்.. இதுவொரு பன்ச். நேர்ல வந்தா நிலம் நடுங்கும், போன்ல பேசினா புயலடிக்கும் இது இன்னொன்னு.
படத்தின் கதை என்ன?
கல்லூரியில் படிக்கும் நானும் ஹீரோயினும் காதலிக்கிறோம். பிறகு இரண்டு பேருமே சினிமாவில் பெரியாளாகிடுறோம். அப்புறம் எங்க காதல் என்னாச்சுங்கிறதுதான் கதை. ஹீரோயினா ஆர்யா மேனன் நடிச்சிருக்காங்க. புதுமுகம்.
இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைக்கிறீங்க...?
அப்பா பாடகர்ங்கறதால சின்ன வயசிலேயே இசை கத்துக்கிட்டேன். கடந்த எட்டு வருஷம் மணிசர்மா சார்கிட்ட கீ போர்ட் ப்ளேயரா வேலை பார்த்தேன். அந்த காலகட்டத்தில் இசையின் எல்லா நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கேன்.
இசையமைப்பதோடு பாடலும் எழுதியிருப்பதால் இந்த கேள்வி. இசை பாடல் வரிகளை அமுக்கிவிடுகிறது என்று ஒரு குற்றச்சாற்று இருக்கே?
வார்த்தைகளை இசை அமுக்கிவிடாமல் வார்த்தைகள் தெளிவாக புரியற மாதிரி இசையமைப்பதுதான் என்னோட பாணி.
படம் எப்படி வந்திருக்கிறது?
ஏறக்குறைய படம் முடிஞ்சிடுச்சி. கே.எஸ்.ரவிக்குமார் சார், விசு சார், பி.வாசு சார்னு பெரிய பெரிய டைரக்டர்களெல்லாம் என்னை இயக்குற மாதிரி படத்தில் காட்சி வருது. இதுவரை எடுத்ததைப் பார்த்துட்டு கே.பி.சாரும், கமல் சாரும் பாராட்டினாங்க. சந்தோஷமாக இருக்கு.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.