Pages

Tuesday, March 30, 2010

என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும்..”என்கிறார் நயன்தாரா

“சினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் பாதாளத்தில் தள்ளி விடுவார்கள்...." என்கிறார் நயன்தாரா.

தன்னைச் சுற்றிய வதந்திகள், பிரபுதேவாவுடனான காதல் பற்றி சமீபத்தில் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”2003-ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஒரு படத்தோடு எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சேன். ஆனால் காலம் என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்திடுச்சி. ஏகப்பட்ட பெயர், புகழ், பணம் கூடவே வதந்தியும்தான்!

என் படம் வெற்றி பெற்றால் சந்தோஷப்படுவேன். தோல்வியடைந்தால் ரொம்பவே வருத்தப்படுவேன். இடைப்பட்ட காலத்தில் அப்படி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.

தமிழில் நான் நடித்த ‘ஆதவன்’, மலையாளத்தில் ‘பாடிகார்ட்’, தெலுங்கில் ‘அடூர்’ ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி வெற்றிப் படமாக அமைந்தன. இதைவிட ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு, அதுவும் ஹீரோயினுக்கு பெரிய சந்தோஷம் வேறென்ன வேணும்..? இந்த படங்களில் நடிக்கும்போதே அவை ஜெயிக்கும் என்று நம்பினேன். என் கணிப்பு பலித்துவிட்டது.

என் திருமணம் எப்போது என்கிற கேள்விக்கு என்னிடத்தில் இப்போது பதில் இல்லை. திருமணம் முக்கியமானது. அது நடக்கும்போது நடக்கும். ஒரு வேளை அது காதல் திருமணமாக இருந்தாலும் என் அப்பா, அம்மா, துபாயில் வசிக்கும் அண்ணனின் சம்மதத்துடன்தான் நடக்கும்.

சினிமா நடிகைகள் எது செய்தாலும் அது பரபரப்பான செய்தியாகி விடுகிறது. நான் மூக்கூத்தி அணிந்ததை கூட ஏதோ ரகசியம் இருக்கு என்று கிசுகிசுவாக்கிவிட்டார்கள். மூக்குத்தி போட்டால் என் முகத்திற்கு நன்றாக இருக்கும் என்று பலரும் சொன்னதால்தான் போட்டேன்.

குறிப்பிட்ட ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்றும் நான் சொல்வதில்லை. கதையும் கேரக்டரும் நல்லாயிருந்தால், எனக்கு ஸ்கோப் இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன். எனக்கு எந்த பேதமும் இல்லை.

என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை. ஆரம்பத்தில் இந்த வதந்திகள் என் மனதை பாதித்தது. இப்போது பழகி விட்டேன். வருத்தப்படுவது இல்லை. என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும்..” என்று அந்தப் பேட்டியில் மனம் திறந்து சொல்லியிருக்கிறார் நயன்ஸ்..!

நம்புவோமாக..! GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.