ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதால் சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையுலக வட்டாரத்திலும் இந்த சந்தோஷம் பரவியுள்ளது. தமிழ் நடிகர்-நடிகைகள் பலர் சூட்டிங்கை முடித்து டி.வி. முன்னால் முடங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதும் துள்ளி குதித்தனர். இதுபற்றி நடிகை திரிஷா கூறியதாவது:-
ஐ.பி.எல். இறுதி போட்டி நடந்த போது நான் ஐதராபாத்தில் இருந்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இந்த செய்தி சாதாரணமானது அல்ல. குறிப்பிடத்தக்க பெரிய சாதனை.
சென்னை அணி ஜெயிக்கும் என்று எனக்கு தெரியும். டோனி, ரெய்னா ஆட்டம் சிறப்பாக இருந்தது. சென்னையில் வசிக்கும் நம் எல்லோருக்கும் இந்த வெற்றி பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது.
இவ்வாறு திரிஷா கூறினார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.