Pages

Thursday, April 15, 2010

பயிற்சியின் போது பிரெட்லீ காயம்..

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ (ஆஸ்திரேலியா) பயிற்சியின் போது நேற்று காயமடைந்தார். அவருக்கு வலது கைபெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் எஞ்சிய இரு ஐ.பி.எல். ஆட்டத்திலும் அவர் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் சங்கக்கரா தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பிரெட்லீ உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். காயம் காரணமாக வருகிற 30 ந் தேதி வெஸ்ட் இண்டீசில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பிரெட்லீ பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.

இது குறித்து அடுத்த 4 அல்லது 5 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டிம் நீல்சன் கூறியுள்ளார்.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.