ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் தயாராகும் ‘அபார்ட் மென்ட்’ படத்தில் நடிகை நீது சந்திராவின் குளியல் காட்சி இடம்பெறுகிறது.
இந்த படத்தில் நீது சந்திராவுடன் தனுஸ்ரீ தத்தா, ரோஹித் ஆகியோரும் நடித்துள்ளனர். த்ரில்லர் படமான இதில் ஒரு முக்கியமான கட்டத்தில் நீதுவின் குளியில் காட்சி வருகிறது. இந்த காட்சி படமாக்கப்பட்ட போது, படப்பிடிப்பு தளத்தில் நீதுவுடன் இயக்குனரும் ஒளிப் பதிவாளரும் மட்டுமே இருந்த னர். ஆடை எதுவும் அணி யாமல் நீது தரையில் அமர்ந்து குளிப்பது போன்று அந்த காட்சி படமாக்கப்பட்டது.
‘சக்ரா’ என்ற படத்தில் மறைந்த ஸ்மிதா பாட்டீல் இதே போல ஒரு குளியல் காட்சியில் நடித்திருந்தார். இது பற்றி நீது கூறுகையில், “குளியல் காட்சியில் நடிக்க முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் அந்த காட்சியை எடுத்த விதம் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. படத்துக்கு மிக தேவை என்பதால் அந்த காட்சியில் நான் நடித்தேன். நிச்சயம் அது ஆபாசமாக இருக்காது. படத்தில் பார்க்கும் போது நான் ஆடை எதுவும் இல்லாமல் குளிப்பது போல இருக்கும். அது கேமிரா ட்ரிக்” என்றார்.
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.